18 ஆண்டுகளுக்கு முன் 2004-ல் டிசம்பர் 26-ஆம் திகதி இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி பேரழிவு இந்தியா, இலங்கை உட்பட 14 நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை வாரி சுருட்டி சென்றது நினைவிருக்கலாம்.
இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு தாய்லாந்து ஆகும். இலங்கை, இந்தோனேசியா, இந்தியாவில் மட்டும் சுமார் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட இந்த சுனாமியின் கொடிய பேரழிவு கடந்த 100 ஆண்டுகளில் நிகழ்ந்த மற்ற இயற்கை பேரழிவுகளை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டு சென்றது. இதனிடையே மக்களுக்கு சுனாமி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5-ஆம் திகதி உலக சுனாமி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையின் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் சுனாமி நினைவு நிகழ்வுகள் இன்று கண்ணீர் கதறல்களுக்கு மத்தியில் அனுட்டிக்கப்பட்டன.