ஆழிப்பேரலை - 18 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று
18 ஆண்டுகளுக்கு முன் 2004-ல் டிசம்பர் 26-ஆம் திகதி இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி பேரழிவு இந்தியா, இலங்கை உட்பட 1…
4:26 AM18 ஆண்டுகளுக்கு முன் 2004-ல் டிசம்பர் 26-ஆம் திகதி இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி பேரழிவு இந்தியா, இலங்கை உட்பட 1…
Jaffna Vision 4:26 AMஇலங்கையை ஊடறுத்துச் செல்லும் தாழமுக்கம், இன்று (26) மேற்கு கடற்கரையை நோக்கி பயணிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவ…
Jaffna Vision 4:15 AMநத்தார் தினத்தையொட்டி இன்று (25) 309 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்…
Jaffna Vision 4:15 AMகிளிநொச்சி – பளை பகுதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை துண்டிக்கப…
Jaffna Vision 4:16 AMயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் இன்று மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று காலை 10.50 மணியளவில்…
Jaffna Vision 4:19 AM
18 ஆண்டுகளுக்கு முன் 2004-ல் டிசம்பர் 26-ஆம் திகதி இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி பேரழிவு இந்தியா, இலங்கை உட்பட 14 நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை வாரி சுருட்டி சென்றது நினைவிருக்கலாம்.
இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு தாய்லாந்து ஆகும். இலங்கை, இந்தோனேசியா, இந்தியாவில் மட்டும் சுமார் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட இந்த சுனாமியின் கொடிய பேரழிவு கடந்த 100 ஆண்டுகளில் நிகழ்ந்த மற்ற இயற்கை பேரழிவுகளை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டு சென்றது. இதனிடையே மக்களுக்கு சுனாமி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5-ஆம் திகதி உலக சுனாமி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையின் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் சுனாமி நினைவு நிகழ்வுகள் இன்று கண்ணீர் கதறல்களுக்கு மத்தியில் அனுட்டிக்கப்பட்டன.
இலங்கையை ஊடறுத்துச் செல்லும் தாழமுக்கம், இன்று (26) மேற்கு கடற்கரையை நோக்கி பயணிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா, மத்திய, சபரகமுவ, மேல், தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் 150 மில்லி மீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுவதுடன் நாட்டை ஊடறுத்து 40 – 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – பளை பகுதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்து பளை முள்ளியடிபகுதியில் ஏ9 வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டு புரண்டது.
இதன்போது குறித்த பேருந்தில் பயணித்த ஒருவர் பலியானதுடன் 17 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்தில் முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் இளம் பெண்ணொருவர் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் இன்று மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய இன்று காலை 10.50 மணியளவில் அளவில் சென்னையில் இருந்து புறப்பட்ட ஏர்லையன்ஸ் ஏர் விமானம், யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சற்று முன்னர் தரையிறங்கியுள்ளது.
இதனையடுத்து மீண்டும் விமானம் முற்பகல் 11.50 மணிக்கு சென்னைக்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே வாரந்தோறும் நான்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையம், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது 2019 ஒக்டோபர் மாதம் மீள் அபிவிருத்தி செய்யப்பட்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.